வைகுண்ட ஏகாதசி பூசம்
இனி அதற்கு அடுத்த மார்கழி மாதம் வந்தால் வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணம் செலவு செய்து கொண்டு போவதும் தை மாதம் வந்தால் பூசம் என்று காவடிகளைத் தூக்கிக் கொண்டு பழனி முதலிய மலைகளுக்கு போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்து சமைத்த பாம்பும் மீனும் கோழியும் உயிர் பெற்றுவிட்டன என்பதும், மண்ணும் சர்க்கரையாகி விட்டது என்பதும், வெட் டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று எழுந்துவிட்டதென்பதும், இன்னும் இதுபோல பல பொய்களை வெட்கமில் லாமல் சொல்வதும், அழுக்குக் குளங் களில் குளித்து அழுக்குத் தண்ணீரை சாப்பிட பஞ்சாமிர்தம் என்னும் ஒரு அசிங்கமான வஸ்துவை கண்டபடி சாப் பிட்டு வயிற்றுப் போக்கெடுத்து காலரா ஏற்பட்டு திரும்பிப் போகும் போது வழியில் சாவதும் சிலர் அந்த காலராவைத் தங்கள் தங்கள் ஊருக்குக் கொண்டுபோய் பரவவிட்டு அங்குள்ளவர்களைக் கொல் லுவதும் அவர்கள் நதி வாய்க்கால் ஓரங்களில் குடி இருந்தால் அந்த காலரா அசிங்கம் வாய்க்கால்களில் கலந்து கரை ஓரங்களில் இருக்கும் ஊர்களிலெல்லாம் பரவி மக்கள் நூற்றுக்கணக்காக சாவது மான காரியங்கள் வருஷந்தோறும் நடை பெறுகின்றன. சாதாரணமாக சீரங்கம் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திலும் பழனி தைப்பூச உற்சவத்திலுமே ஏற்பட்ட சுகா தாரக் கெடுதியால் ஒவ்வொரு வருஷமும் முதல் முதல் அங்கு காலரா உற்பத்தியாகி பிறகு இரண்டு மூன்று மாதம் தென்னா டெல்லாம் பரவி மாதம் 1க்கு இரண்டு, மூன்று ஆயிரம் பேருக்குக் குறைவில் லாமல் கொள்ளை கொண்டு போகின் றது. இதன் உண்மையை ஒருவரும் அறியாமல் பேதியாயி மாரியாயி ஓங் காளியாயி ஊருக்கு ஒருகுடம் எண் ணெய் கொண்டு வந்து ஆளுக்கு அரை கரண்டி கொடுத்துவிட்டாள் என்று சொல்லி ஊரிலுள்ள மக்களில் சில பாகம் செத்து காலரா தானாக ஒடுங்கியபின் ஓங்காளியின் பொங்கலும் காளி பூஜையும் செய்து பேதியை நிறுத்திவிட்டதாக வெட் கமில்லாமல் பேசிக் கொள்வதும் அன்றியும்,
கிராம தேவதை
கிராமங்களிலெல்லாம் மார்கழி, தை மாதங்களிலேயே மாரியம்மன் பண்டிகை கொண்டாடி வெந்தும் வேகாத பொங் கலும், பச்சைமாவும், சரியாய் சுத்தம் செய்யாத வேகாத மாமிசமும் கண்டபடி புசிப்பதால் அஜீரணம் காலரா முதலிய வியாதிகள் உண்டாவதையும் பார்க்கின் றோம். பொதுவாகவே நமது நாட்டில் கூட்டம் சேர்ந்தாலே அசுத்தம் உண் டாக்கி வியாதிகள் ஏற்படுவதை அனு பவத்தில் பார்த்து வருகின்றோம்.
சிவராத்திரி
சிவராத்திரி
இனி அதற்கடுத்த மாசி மாதம் வந் தால் சிவராத்திரி என்று கண்டபடி கிழங்கு வகைகளையும் தானியவகை களையும் பலகார வகைகளையும் ஒரே நாளில் செய்து அளவுக்கு மேல் தின்று குழந்தைகளையும் தின்னச் செய்து அஜீரணத்தை யும் வயிற்று வலியையும் உண்டாக்கிக் கொள்வதோடு இதனால் ஏற்படும் செலவு எவ்வளவு என்பதை யாராவது யோசித்துப் பார்க்கின்றார்களா? என்று கேட்கின்றோம். இப்படியே ஒவ் வொரு மாதமும் உற்சவமும், பண்டிகை களும், விரதங்களும், சடங்குகளும் ஏற் பட்டு மொத்தத்தில் வருஷத்தில் எவ்வளவு கோடி ரூபாய்கள் செலவு, எவ்வளவு வியாதிகள் வரவு, எவ்வளவு உயிர்கள் போக்கு என்பவைகளை யார் கவனிக்கின் றார்கள்? இந்தப் பணம் எல்லாம் தேசிய பணமல்லவா? ஏழைத் தேசம், தரித்திர தேசம், அடிக்கடி பஞ்சம் வரும் தேசம், வேலையில்லாமல் தொழி லில்லாமல் கூலிக்காரர்கள் கும்பல் கும்ப லாய் பட்டினி கிடந்து மடிவதுடன் பெண்டு பிள்ளை குழந்தைகளுடன் வெளிநாட்டிற் குக் கூலியாக கப்பலேறும் தேசம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற நாம் எத் தனை நாட்களை, எத்தனை ரூபாய்களை எத்தனை ஊக்கங்களை இந்த பாழும் அர்த்தமற்ற பொய்யான ஒரு காசுக்கும் உதவாததான நமக்கு இழிவையும் அவ மானத்தையும் தருவதான பண்டிகைக்கும் உற்சவத்திற்கும் பூஜைக்கும் சடங்குக் குமாக ஒவ்வொரு வரும் செலவு செய்கின் றோம் என்பதை கவனித்தால் இந்த நாடு பணமில்லாத நாடா அல்லது புத்தி இல் லாத நாடா என்பது நன்றாய் விளங்கும்.
இது யார் சூழ்ச்சி?
எனவே, இப்படிக்கெல்லாம் சொல் வதைப்பார்த்தால் இந்த பண்டிகை களையும் உற்சவம் முதலியவைகளையும் ஏற்படுத்தியவர்கள் எல்லோரும் அறிவில் லாதவர்களா என்கின்ற கேள்வி பிறக்க லாம். நான் அவர்களை அறிவில்லாதவர் என்று சொல்ல இஷ்டப்படமாட்டேன். மற்ற படியோ, என்றால் பெரும்பாலும் அவர் களைச் சுயநலக்காரர்களும், தந்திரக் காரர்களும் அதிகார ஆசை உடையவர் களுமாயிருக்க வேண்டுமென்றே சொல் வேன். என்புத்திக்குட்பட்ட வரையில் இந்த பண்டிகை உற்சவம் முதலியவை எல்லாம் புரோகிதர்களான பார்ப்பனர் களும் ஆட்சிக்காரர்களான அரசர்களும் கலந்து கண்டுபிடித்து செய்த தந்திர மென்பதே எனது அபிப்பிராயம். உலகத் தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறி யாமைக்கும் கொடுமைக்கும் புரோகிதர் களும் அரசர்களுமே சேர்ந்து கூட்டுப் பொறுப்பாளர்களாவார்கள். சாதாரண மாக உலக சரித்திரத்தில் கொடுமைக் காரர்களும் சூழ்ச்சிகாரர்களாய் இருந்த வர்களே புரோகிதர்கள் என்கின்ற உயர்ந்த ஜாதிக்காரர்களாகவும் கொள்ளைக் காரர்களும் மூர்க்கர்களுமாயிருந்தவர் களே அரசர்களாகவும் ஏற்பட்டு இருக் கிறார்கள். இவ்விருவரும் ஜனங்களை ஏய்த்து ஆதிக்கம் செலுத்த வகை கண்டு பிடிக்க வேண்டிய அவசியமுடையவர்கள்.
அந்தப்படி மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வாழ வேண்டுமானால் அந்த மக்களை அறிவினாலும் செல்வத்தினா லும் தாழ்மைப்படுத்தி வைத்திருந்தால் தான் முடியும். ஒரு மனிதன் அறிவுடை யவனா யிருப்பானானால் புரோகிதர் களுக்கு ஏமாற மாட்டான். செல்வமிருக் குமானால் அரசனுக்குப் பயப்பட மாட் டான். ஆகையால் அறிவும் செல்வமும் இல்லாமல் செய்வதற்கே கோயில் உற்சவம் பண்டிகை சடங்கு ஆகியதான செலவுக்கு ஏற்றவழிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். மக்கள் சம்பாதிக்கும் பணங்களில் கணக்குப் பார்த்தால் பெரும்பாகமும் இவைகளுக்கே செலவு செய்யும்படியாகவும் மற்றும் மேல் கொண்டு மீதி ஆவதெல்லாம் இவர்கள் சமுகத் திற்கே பயன்படும்படியாகவும் மற்றும் மேற்கொண்டு ஒவ்வொரு குடும்பமும் அதாவது நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்கள் இவைகளின் பயனாய் கடன்காரர்களாக இருக்கவுமே இருந்து வரப்படுகின்றது. எனவே, நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும் செல்வ முள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள நாடாகவும் இருக்க வேண்டுமானால் முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில் பூஜை ஆகியவை ஒழிந்தாக வேண்டும். இவைகளை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும் வைரமுமாக ஆக்கினாலும் சமுத்திரங்களை யெல்லாம் பாலும் நெய்யும் தேனுமாக ஆக்கினாலும் மேல்கண்ட உற்சவம், சடங்கு, கோவில் பூஜை, பண்டிகை ஆகியவைகளே சாப் பிட்டு விடும். ஆதலால் இனி மேலாவது இம்மாதிரியான காரியங்களுக்கு அடி மையாகி வீண் செலவு செய்யக் கூடாது என்பதே எனது ஆசை.
- குடிஅரசு-சொற்பொழிவு-20.10.1929

No comments:
Post a Comment