Friday, November 19, 2010

கார்த்திகைத் தீபத்தின் யோக்கியதை


எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும் அப்பண்டிகைகளில் உள்ள அபிமானமும், மூடநம்பிக்கையும் ஒழிந்த பாடில்லை.மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டி கைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக்கொண்டு வருகின்றன என்பதை நாம் பலதடவை எடுத்துக் காட்டிப் பேசியும், எழுதியும் வருகிறோம்.
அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பதைப்போல, அடிக்கடி அவற்றின் புரட்டுக்களை வெளிப்படுத்தி வருவதனால் நமது மக்களுக்கு அவை களின் உண்மை விளங்கக்கூடும் என்று கருதியே நாமும் இடைவிடாமல் எழுதிக் கொண்டு வருகிறோம்.
சென்ற மாதத்தில்தான் நமது நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு பாழாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகை யைப் பற்றி எழுதியிருந்தோம்.
அப்பண்டிகையால் நமக்குக் கிடைத்த பலன் என்ன? தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள் இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் பத்துகோடி ரூபாயும், அனா வசியமாய் துணிவாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும், கரியுமாக ஆக்கிய வகையிலும் செலவாயிருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழைமக்கள், கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசம் முதலிய வெறிதரும் பானங் களை குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்து போயிருந்த சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனத்தில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு, அவர் களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.
இவ்வளவு மாத்திரம் அல்ல; தீபா வளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்ட தன் பயனாய், தினக்கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்த தோடல்லாமல், கடன்வாங்கி நஷ்ட மடைந்தது எவ்வளவு! வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு! தீபா வளிக்கு முன் சில நாட்களும், தீபா வளிக்குப்பின் சில நாட்களும், தீபா வளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட்டுக் களிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்களு டைய படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ் வளவு! அரசியல் காரியங்கள் நடை பெறுவதில் இந்த ஓய்வால் தடைபட்ட காரியங்கள் எவ்வளவு?
இவ்வளவு தொல்லைகளையும் உண் டாக்கிச்சென்ற தீபாவளிப் பண்டிகையின் ஆர்ப்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதங்கூட ஆகவில்லை, சரியாய் 15 நாட்களுக்குள்ளாகவே மற்றொரு சனியன் தொடர்ந்து வந்து விட்டது.
இவ்வாறு தவறாமல் ஒவ்வொரு மாதமும் நமது நாட்டுச் செல்வத்திற்குச் சனியன் பிடிப்பது வழக்கமாகவும், அவ்வழக்கம் தெய்வீகம் என்று சொல் லப்படுவதாகவும் மதத்தின் முக்கிய பகுதி என்று சொல்லப்படுவதாகவும் இருந்து வருகிறது.
இப்பொழுது வரும் சனியனாகிய பண்டிகை கார்த்திகைத் தீபம் என்பது தான்.
இந்த கார்த்திகைத் தீபப்பண்டி கையை ஒரு பெரிய தெய்வீகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை இந்து மதத்தில் உள்ள சைவர், வைணவர் வீரசைவர், ஸ்மார்த் தர் முதலிய எல்லாப் பிரிவினரும் கொண்டாடுகின்றனர்.
சாதாரணமாகக் கார்த்திகை நட்சத் திர தினத்தை சுப்பிரமணியன் என் னும் சாமிக்கு உகந்த சிறந்த நாளாகக் கருதியே பக்தர்கள் என்பவர்கள் விர தங்களும், பூஜைகளும் நடத்தி வருகின் றனர். சாதாரண காலத்தில் வரும் கார்த்திகைகளைவிட, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.
இதன் பொருட்டுத் திருவண்ணா மலை முதலிய பல ஊர்களுக்கு யாத்திரை போய்ப்பணத்தைச் செலவு செய்து விட்டுத் திரும்பும்போது அங் கிருந்து வாந்தி பேதியைக் கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் கார்த்திகைக் காக, வைத்தீஸ்வரன் கோயில், குன் றக்குடி, திருப்பரங்குன்றம், திருச்செந் தூர், சுவாமிமலை முதலிய ஊர்களுக்கு மக்கள் சென்று செலவு செய்யும் செல் வங்களே பதினாயிரக்கணக்காகவும், இலட்சக்கணக்காகவும், ஆகும்போது பெரிய கார்த்திகை என்று பெயர் பெற்ற கார்த்திகை மாதப் பண்டிகை நாளில் செலவாகும் பொருள் கோடிக்கணக்கில் குறைவுபடுமா?
இதில் எவ்வாறு பொருள் வீணக் கப்படுகிறதென்பதை நினைத்துப் பாருங்கள்!
தீபாவளிக்காக வரவழைத்து விற் பனையாகாமல் கடைகளில் தேங்கிக் கிடக்கும் பட்டாசுகளுக்குச் செலவு வந்து இந்தப் பட்டாசுகளின் மூலம் பணம் படபடவென்று சத்தமிட்டு வீணாக்கப்படும்.
வீடுகளுக்குள்ளும், வெளிப்புறங் களிலும், காடுகளிலும். மேடுகளிலும், குப்பைகளிலும், குளங்களிலும் எண்ணற்ற 100, 1000, 10000,1000000 கணக்கான விளக்குகளைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செலவாகும் நெய், எண்ணெய்ச் செலவு எவ்வளவு!
கோயில்கள் என்பவைகளுக்குச் சொக் கப்பனை கட்டி நெருப்பு வைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண்ணெய், விறகு முதலியவைகளுக்காகும் செலவு எவ்வளவு!
கார்த்திகைப் பண்டிகைக்காக திரு வண்ணாமலை முதலிய ஊர்களுக்குப் பிரயாணம் செய்வதன் மூலமாகும் ரொக்கப் பணச் செலவு எவ்வளவு! அங்கு கூம்புக்கு (சொக்கப்பனை) செலவாகும் விறகு, கற்பூரம், வெண்ணெய், நெய் ஆகியவற்றிற்காகும் செலவு எவ்வளவு?
இவ்வாறு பல வகையில் செலவு செய் யப்படும் கோடிக்கணக்கான பணங்களால் நமது நாட்டிற்குக் கடுகளவாவது பய னுண்டா என்று ஆலோசித்துப் பாருங்கள்.
இன்னும் இப்பண்டிகையினால் மக் களுக்குண்டாகும் மூடநம்பிக்கையையும், அதனால் உண்டாகும் மூடப்பழக்க வழக் கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
கார்த்திகையைப் பற்றி வழங்கும் புராணக்கதை இரண்டு. அவைகளில் ஒன்று:-
ஒரு சமயம் அக்னி தேவன் (நெருப்பு) என்னும் கடவுள் சப்தரிஷிகளின் மனைவி மார்களைப் பார்த்து மோகங் கொண் டானாம்.
அதை அறிந்து அவன் மனைவி சுவாகாதேவி என்பவள் அந்த ரிஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால் அவர்களால் தன் கணவன் சபிக்கப்படு வான் என்று எண்ணினாளாம்
அதனால் அவள் வசிஷ்டரின் மனைவி யாகிய அருந்ததி உருவத்தை மாத்திரம் விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவிமார்களை போல் உருவம் கொண்டு தன் கணவன் ஆசையை நிறை வேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்று பெயராம். இவைகள்தான் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுவதாம்.
குடிஅரசு, தலையங்கம் , 22.11.1931

No comments:

Post a Comment