Friday, December 17, 2010

காணாத இடத்தில் குரைக்காதே!

மூடர்: சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தைப் படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமா? அதுதான் கடவுள்.இன்னும் ஒன்றுதான் அப்புறம் ஒன்றுமில்லை. துளியூண்டு சங்கதி. காவடி எடுத்துக் கொண்டு போனவன் காலராவில் செத்த பிறகு கூடவா நாசமாய் போன சாமி இருக்குதென்று நினைக்கின்றீர்கள்?
பதில்: அப்படியானால் அந்தக் காரணத்தை கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா?
மூடர்: கடவுளைப் படைப்பதற்குக் காரணம் கேட்பது முட்டாள்தனமாகும்.
பதில்: அப்படியானால் உலக படைப்புக்குக் காரணம் தேடிக் கொண்டிருப்பது அதை விட இரட்டிப்பு முட்டாள்தனமாகும்.
மூடர்: உங்களோடு யார் பேசுவார்கள்?
பதில்: சரி, நல்ல காரியமாச்சுது சனியன் தொலைஞ்சுது. ஆனால் காணாத இடத்தில் குரைக்காதே!
(சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் தந்தை பெரியார் எழுதியது. பக்கம் 12)
 குடிஅரசு( 4.1.1931)

No comments:

Post a Comment